யார் இந்த பீட்டா?
PETA என்பதன் விளக்கம் People for of Animals (PETA)
1980 ஆம் வருடம் விலங்குகள் நல அமைப்பாகவும் விலங்குகளை காப்பதற்கான அமைப்பாகவும் பதிவுசெய்து அமெரிக்காவில் ஆரம்பிக்கப்பட்டது. சில நாட்கள் போக போக உரிமையாளரால் தனித்து விடப்பட்ட நாய் பூனைக்களின் தொந்தரவு அதிகமாக இருப்பதாக அதிகமான அழைப்புகள் இவர்களுக்கு வர ஆரம்பித்தன.
சில நாட்களில் லட்சக்கணக்கில் தனித்து விடப்பட்ட நாய்களையும் பூனைகளையும் பிறவற்றையும் கைப்பற்றிய பின்பு இந்த விலங்குகளை கையாள்வதற்கான சட்டத்தை இயற்ற அமெரிக்க அரசை வலியுறுத்தின. அதன்படி இயற்றிய சட்டத்தின்படி விலங்குகள் கைப்பற்றப்பட்ட நாளிலிருந்து 15 நாட்கள் அந்த விலங்குகளை பீட்டா அமைப்பு பாதுகாக்கும். அதற்கு பிறகு அந்த விலங்குகளை பீட்டா அமைப்பு என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம்.
பீட்டா செய்தது என்ன?
அந்த விலங்குகளை என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளலாம் என்கிற உரிமையை பயன்படுத்தி தங்களிடம் வந்து உரிமையாளர்களால் திருப்பி வாங்க படாத 90% விலங்குகளை இதுவரை பீட்டா அமைப்பு கொன்று குவித்துள்ளது. இதுவரை வெளிச்சத்துக்கு வராத இந்த எண்ணைக்கையினை கண்ட அமெரிக்கர்கள் பீட்டா அமைப்பிற்கு அமெரிக்காவில் தடை கூறியிருக்கின்றனர். இதற்கான வழக்கும் பீட்டா அமைப்பின் மேல் உள்ளது. அவர்கள் கொன்றுகுவித்த விலங்குகளின் பட்டியல் இந்த இணையதளத்தில் விவரமாக கொடுக்கப்பட்டுள்ளது. (https://www.petakillsanimals.com/proof-peta-kills/#petakills)
ஜல்லிக்கட்டுக்கும் பீட்டாவுக்கும் என்ன சம்பந்தம்?
பொதுவாக நல்ல நோக்கத்திற்காக ஆரம்பிக்கப்படும் தொண்டு நிறுவனங்களில் பெரும்பாலானவை கால ஓட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட நோக்கத்திலிருந்து மாறிவிடுகின்றன. இதே நிலைமைதான் இன்று பீட்டாவிற்கும் . தங்களது மாய செயலினால் பெரும் தொண்டு நிதியை பெற்று வந்த பீட்டா நிறுவனம் தனது புகழை மற்ற நாடுகளிலும் பரப்பி அதன் மூலம் நிதியை பெற முயற்சி செய்தது. அதற்காக அது தேர்ந்தெடுத்த மிகப்பெரிய நாடு இந்தியா .
சரி இந்தியாவில் எப்படி தன்னை அடையாளபடுத்திக்கொள்ள முடியும் என்கிற யோசனையில் இறங்கிய பீட்டா அமைப்பு மனிதனுக்கும் விலங்குகளுக்கும் உள்ள தொடர்பினை வைத்து விளையாட்டு காட்ட ஆரம்பித்தது. இதற்காக முதலில் இறங்கியது தான் ஜல்லிக்கட்டுக்கு தடை. அதற்கேற்றாற்போல காளைமாடுகள் வனவிலங்குகள் பட்டியலில் இணைக்கப்பட்டதும் பீட்டாவிற்கு சாதகமாக போயிற்று.
ஜல்லிக்கட்டுக்கு தடை வாங்குவதால் எப்படி பீட்டாவிற்கு எப்படி லாபம் என்றால் , இந்தியாவில் தமிழகம் என்கிற பகுதியில் விலங்குகளை இப்படியெல்லாம் கொடுமை படுத்தினார்கள் என்று சில வீடியோக்களை போட்டுக்காட்டி இதற்க்கு நாங்கள் தடை வாங்கி விட்டோம் என்று விளம்பரபடுத்துவார்கள். உடனே உலகம் முழுவதுமிருக்கின்ற ஆர்வலர்கள் நிதியை பீட்டா அமைப்பிற்கு அனுப்பி கொட்டுவார்கள். இதற்காகத்தான் இத்தனையும் செய்கின்றது பீட்டா.
கண்டுகொள்ளாவிட்டால் என்ன நடக்கும் :
ஜல்லிக்கட்டுக்கு தடை வாங்கிவிட்ட பீட்டா அமைப்பு இப்போது கேரளாவில் விடப்படும் யானை பந்தயத்தை நோக்கி தனது பயணத்தை தொடங்கியிருக்கிறது. நாம் இன்னும் ஒன்றும் செய்யாமல் இருந்தால் இந்த பீட்டா அமைப்பு அனைத்து பாரம்பரிய விளையாட்டுகளையும் ஒழித்துவிட்டு நம் அடையாளங்களை அழித்துவிடும்.
நன்றி
ஸ்ரீ