Site icon பாமரன் கருத்து

மோடியின் 500 1000 செல்லாது என்ற அதிரடி அறிவிப்பும் ..அரசு செய்திருக்க வேண்டியதும் ஒரு பார்வை …..

மோடியின் 500 1000 செல்லாது என்ற அதிரடி அறிவிப்பும் ..அரசு செய்திருக்க வேண்டியதும் ஒரு பார்வை …..

இன்று பிரதமர் மோடி அவர்கள் 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்துள்ளார் ..

மேலும் நாளை வங்கிகள் செயல்படாது என்றும் இரண்டு நாட்களுக்கு ATM செயல்படாது என்றும் அறிவித்துள்ளார் .

அதே நேரத்தில் பெட்ரோல் பங்குகள் மருத்துவமனைகள் ரயில்வே நிலையம் விமான நிலையம் போன்ற இடங்களில் இந்த நோட்டுகள் மாற்றிக்கொள்ளலாம் எனவும் அறிவித்துள்ளார் .டிசம்பர் 31 குள் வங்கிகளில் செலுத்தி மாற்றிகொள்ளலாம் .

பொது மக்களுக்கு நிச்சயமாக இந்த திடீர் அறிவிப்பு பாதிக்கத்தான் செய்யும் . கருப்பு பணத்தை ஒழிக்க சில கடினமான முடிவுகளை அரசு எடுக்கும் போது பொதுமக்கள் சில கஷ்டங்களை
பொறுத்துக்கொள்ளவேண்டும் ….

அரசு என்ன செய்திருக்கலாம் :

நாளை வங்கிகளை திறந்திருக்கலாம்

அடம் மையங்களில் முன்கூட்டியே 100 ரூபாய் நோட்டுகளை நிரப்பி மக்களின் கஷ்டத்தை குறைத்திருக்கலாம்

வங்கி போஸ்ட் ஆபீஸ் தவிர மற்ற மத்திய அரசு அலுவலகங்களை பயன்படுத்தி எளிதில் மக்கள் பணத்தை மாற்றிக்கொள்ள வழி செய்திருக்கலாம் ….

அந்த அதிரடி அறிவிப்பு பொதுமக்களுக்கு கஷ்டத்தை கொடுத்தாலும் மிகபெரிய கருப்பு பண முதலைகளை இது கண்டுகொள்ளவும் கட்டுப்படுத்தவும் உதவும் .

Share with your friends !
Exit mobile version