இந்த காலகட்டத்தில் இரண்டு வகையான இயங்கு தளங்களே பெரும்பாலும் மொபைல் போன்களில் பயன்படுத்த படுகின்றன …ஒன்று iOS மற்றொன்று ஆண்ட்ராய்டு …iOS ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்பு ..ஆண்ட்ராய்டு கூகில் நிறுவனத்தின் தயாரிப்பு ….
ஆப்பிள் போன்களில் அணைத்து தகவல்களும் என்கிரிப்ட் செய்யப்பட்டு மறைவாக வைக்கப்படும் அதன் சொந்தக்காரரை தவிர ..எனவே ஆப்பிள் போனை மற்றவர்கள் கைப்பற்றினால் கூட பயனரின் தகவல்களை எடுக்க முடியாது ..
ஆப்பிள் நிறுவனம் மிகபெரிய தொகையினை செலவு செய்து செக்யூரிட்டி பாதுகாப்பினை அதிகப்படுத்தி வருகின்றது ..
அதே நேரத்தில் ஆண்ட்ராய்டு மொபைலில் ஒரு தகவலும் என்கிரிப்ட் செய்யப்படுவதில்லை ..எனவே எளிதாக எவரும் தகவல்களை திருட முடியும் …பின்தொடர முடியும் …
பிரச்சனை :
விலை உயர்ந்த ஆப்பிள் போன்களை சமூகத்தில் உயர்ந்த நிலையில் இருப்பவர்கள் பயன்படுத்தும் நிலையில் பெரும்பலான ஏழை நடுத்தர மக்கள் ஆண்ட்ராய்டு போன்களை பயன்படுத்துகின்றனர் ..
எந்த இடத்தில் பிரச்சனை என்றால்
உயர்ந்தவர்களின் தகவல்கள் ரகசியமாகவும் ஏழை நடுத்தர மக்களின் தகவல்கள் திருடப்பட்ட கூடியதாகவும் இருப்பது தான் ..
உதாரணமாக இன்றைய தினத்தில் காந்தியோ மார்ட்டின் லூதர் கிங்கோ ஆப்பிள் போன் பயன்படுத்தினால் அவர்களின் போரட்டம் குறித்த தகவல்களை எளிதில் அரசாங்கத்தாலோ சமூக விரோதிகளோ கண்டுபிடிக்க முடியாது ..அதே நேரத்தில் அவர்கள் ஆண்ட்ராய்டு போன் பயன்படுத்தினால் அவர்களின் தகவல்களை திருடி போரட்டத்தை தடுக்க முடியும் ….
இதை ஆண்ட்ராய்டு உணர்ந்து மொபைல் போன் பாதுகாப்பில் சமநிலையினை பேணுமா ?
நாமும் தெரிந்துகொள்ள வேண்டும் …..