Site icon பாமரன் கருத்து

மாண்புமிகு நீதியரசர்களே !

மாண்புமிகு நீதியரசர்களே !

கார் போகும் சாலையில்
கண்கள் காணவில்லையோ

தேநீருடன் படிக்கும் செய்திகளில்
உதடுகள் வாசிக்கவில்லையோ

நீவிர் உத்தரவிட்ட பின்னரும்
எம்மவன் சாக்கடைக்குள் நிற்கிறான்

மூழ்கி அடைப்பெடுக்கும் முயற்சியில்
மூச்சு அடங்கி சாகிறான்

சமூகம் நீதி செய்யும் இக்கற்பழிப்பை
யார் கொண்டு சரி செய்வோம்

மாண்புமிகு நீதியரசர்களே !

ஸ்ரீ

Exit mobile version