பொது சிவில் சட்டமும் பாஜக அரசும்
பொது சிவில் சட்டம் என்றால் என்ன ?
இந்திய குடிமக்கள் அனைவருக்கும் ஒரே சட்டம் அவ்வளவுதான் பொது சிவில் சட்டம் .
இந்திய அரசியலமைப்பை அம்பேத்கார் போன்ற அறிஞர்கள் எழுதும் போது பல மதங்களை சேர்ந்த குறிப்பாக சிறும்பான்மையினரான முஸ்லிம் மக்கள் தங்கள் மத சட்டத்தின்படி திருமணம் விவகாரத்து வாரிசு போன்றவற்றில் தங்கள் மதவழக்கங்களை பின்பற்றவும் வழிவகை செய்தனர் . இவை அனைத்தும் மக்களின் மத உணர்வுகளை மதித்தே அவ்வாறு செய்தனர் .
இப்பொதே உள்ளது :
பாஜக கட்சியினர் சொல்வதை போல பொது சிவில் சட்டம் நமக்கு தெரியாதது இல்லை .
இப்போது பெரும்பலான வழக்குகளில் பொதுவான சட்டப்படியே தண்டனைகள் வழங்கப்படுகின்றன . எனவே பாஜக கட்சி சொல்வதை போல பொது சிவில் சட்டத்தில் புதிதாக ஒன்றும் இருக்க போவதில்லை …சிறும்பான்மையினரின் மத வழக்கங்கள் மட்டும் தடை செய்யப்படும் ..
ஏன் இத்தனை மாயை :
இப்போது ஏதோ ஒரு மதத்தவர் கொலை செய்தால் ஏழு ஆண்டும் மற்றொரு மதத்தவர் கொலை செய்தால் தண்டனையே இல்லாததை போன்றும் பொது சிவில் சட்டம் கொண்டுவந்தால் மட்டுமே இது நிறுத்தப்படும் என்பதை போன்ற மாயையை பாஜக கட்சி காட்டிவருகிறது .
அதுவும் எந்த மாநிலத்திலாவது தேர்தல் வந்தால் மட்டுமே ..
மக்களே இப்போதே நாம் பின்பற்றி வருவது பொது சிவில் சட்டம் தான் ..ஆகவே நீங்கள் புதிதாக அவர்கள் ஏதோ செய்ய போகின்றார்கள் என்று எண்ண வேண்டாம் .
பொது சிவில் சட்டம் அவசியமா :
அன்று இந்தியா பாகிஸ்தான் மதங்களை வைத்து பிரிந்த போது தாய்நாடு பற்றினாள் இங்கு இருந்தவர்கள் முசுலீம் மக்கள் .ஆகவே தான் மிகபெரிய சட்டப்புத்தகத்தை வடிவமைத்த அறிஞர்கள் மத உணர்வுகளை மதித்து அவர்கள் மத பழக்க வழக்கங்களின்படி திருமணம் வாரிசு போன்றவைகளை அமைத்துக்கொள்ள அனுமதி தந்தனர்
சட்டம் சொல்வதென்ன :
பகுதி நாலில் சில நெறிமுறைகள் சொல்லப்பட்டுள்ளன .அதன்படி பொது சிவில் சட்டத்தினை அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படியாக கொண்டு வரவேண்டும் என்பது .
இதனை வைத்துக்கொண்டே பிஜேபி கட்சி பயமுறுத்தி வருகின்றது ….
அதே பகுதியில் அனைத்து மாநிலத்திலும் மதுவிலக்கை கொண்டுவர வேண்டும் என்றும் சொல்லப்பட்டுள்ளது .ஆனால் அதை எவரும் கண்டுகொள்ளவில்லை…