Site icon பாமரன் கருத்து

பொங்கல் கட்டாய விடுமுறை போன வருஷமே இல்லப்பா ….15 வருஷமாவே இப்படிதான் இருக்கு …உண்மை என்ன ?

தமிழக செய்தி சேனல்கள் அனைத்தும் நேற்று பொங்கலுக்கு கட்டாய விடுமுறை இல்லை …அதில்  இருந்து நீக்கி விருப்ப விடுமுறை பட்டியலுக்கு கொண்டு சேர்த்துவிட்டார்கள் என்று ஆர்பரித்தன ….நானும் முதலில் அப்படிதான் நினைத்தேன் …மக்களும் அப்படிதான் நினைத்தார்கள் …சமூக வலைதளங்களில் நமது எதிர்ப்பை பதிவு செய்தோம் ….

அரசியல் கட்சிகள் கூட எதிர்ப்பையும் போராட்டத்தையும் முன்னெடுக்க தேதிகளை அறிவித்துவிட்டன ….

இந்த செய்திகளை படித்துக்கொண்டிருக்கும்போது அன்புமணி ராமதாஸ் அவர்களின் செய்தியை படிக்க நேரிட்டது ..அந்த செய்தியில் கடந்த 15 ஆண்டுகளாக பொங்கல் விருப்ப விடுமுறை பட்டியலில் தான் உள்ளதென்றும் இந்த ஆண்டு இப்படி நடக்கவில்லையென்றும் தெரிவித்திருந்தார் …

நானும் உண்மையை அறிந்துகொள்ள கடந்த ஆண்டுக்கான மத்திய அரசின் விடுமுறை பட்டியலை தரவிறக்கம் செய்து பார்த்தபோது பொங்கல் கட்டாய விடுமுறை பட்டியலில் சென்ற ஆண்டே இல்லை என்பதை உணர்ந்தேன் ..

எங்கு இப்படி தவறான செய்தி பரவிட  ஆரம்பித்தது என்றால் செய்தி நிறுவனங்களில் இருந்தே …பொறுப்பாக இருக்கவேண்டிய இவையே மக்களின் உணர்வினை தூண்டும் விதத்தில் செய்திகளை வெளியிடலாமா ?

பொங்கலை கட்டாய விடுமுறை பட்டியலில் இணைக்க வேண்டுகோள் விடுப்போம் ..உண்மையை தெரிந்துகொள்வோம் …

ஸ்ரீ

Exit mobile version