Site icon பாமரன் கருத்து

நெடுவாசல் போராட்டம் நீண்டுகொண்டே போவது ஏன் ?

நெடுவாசல் போராட்டம் நீண்டுகொண்டே போவது ஏன் ?

அடையாள போராட்டங்களை மட்டுமே நம் அரசியல்வாதிகள் மக்களுக்கு காட்டி அதற்கு பழக்கப்படுத்தி வந்திருந்தனர் .

ஆனால் முதல்முறையாக ஒட்டுமொத்த இளைஞர்களும் பொதுமக்களும் புதுவிதமான அதாவது கேட்டது நடக்கும் வரை போராடுவோம் என்கிற முறையை சல்லிக்கட்டு போரட்டத்தில் அறிமுக படுத்தியது . அதில் வெற்றியும் கண்டது . தமிழகத்தின் இந்த போராட்டதை கண்டு வாய்பிளக்காதவர்கள் உலகில் இல்லை ..

நெடுவாசல் நீளுவது ஏன் ?

சல்லிக்கட்டு போராட்டத்திற்கும் நெடுவாசல் போராட்டத்திற்கும் நல்ல நோக்கங்களை தவிர முக்கிய வேறுபாடு ஒன்று உண்டு . ஆம் சல்லிக்கட்டு போராட்டம் சென்னையில் ஆரம்பித்து மாநிலம் முழுவதும் பரவியது ..ஆனால் நெடுவாசல் போராட்டம் அங்கு தொடங்கி இன்னும் சென்னையை வந்தடையவில்லை ..

பொதுவாக எந்தவொரு பிரச்சனையாக இருந்தாலும் சரி போராட்டமாக இருந்தாலும் சரி அது தலைநகரத்தில் நடக்கும்போதுதான் முக்கியதுவம் பெருகின்றது …

ஒருவேளை நெடுவாசல் போராட்டம் சென்னையில் நடந்திருந்தால் ஒட்டுமொத்த தமிழகமும் இந்தியாவும் சென்னையை கவனித்திருக்கும் …

இப்போது நெடுவாசலை கவனிக்கவில்லை என்று சொல்லவில்லை …யாருக்கும் தொந்தரவில்லாமல் மீடியாக்களின் மூலமாக மட்டுமே பிறரை சென்று அடைவதினால் நெடுவாசல் போராட்டம் ஒரு தாக்கத்தை அரசிடம் ஏற்படுத்தவில்லை ….போராடிவிட்டு ஓய்ந்துவிடுவார்கள் என்று எண்ணியிருக்கவும் வாய்ப்புண்டு …

நெடுவாசல் போராட்டம் எவ்வளவு நாட்களுக்கு நீள போகிறது ஆட்சியளர்களே …..

Exit mobile version