Site icon பாமரன் கருத்து

நிரவ் மோடி 11,300 கோடி மோசடி செய்தது எப்படி ? LOU என்றால் என்ன ? நடந்தது எப்போது ?

அனைவருக்கும் தெரியவேண்டிய ஊழல் ….கண்டிப்பாக பகிருங்கள்

விஜய் மல்லையா வங்கிகளில் கடன்களை வாங்கி குவித்துவிட்டு வெளிநாட்டுக்கு சென்று பதுங்கிய விவகாரமே இன்னும் முடியாமல் இருக்கும்போது அடுத்த பேரிடியாக வந்திருக்கிறது நிரவ் மோடியின் ஏமாற்று வேலை . பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார் 11 ஆயிரத்து 300 கோடி ரூபாயை ஏமாற்றிவிட்டு வெளிநாட்டுக்கு பறந்துவிட்டார் .

 

நிரவ் மோடி பஞ்சாப் நேசனல்  வங்கியை ஏமாற்றியது எப்படி என பார்ப்போம் . 

நிரவ் மோடி மற்றும் அவரது கீழ் இயங்கும் மூன்று நிறுவனங்கள் மும்பையில் இயங்கும் பஞ்சாப் நேசனல் வங்கியில் LOU (Letter of undertaking ) ஐ வங்கியின் விதிமுறைகளை அங்குள்ள வங்கி அதிகாரியின் துணையோடு வாங்கி அதன் மூலமாக லோன் வாங்கி இந்த ஏமாற்றுவேலையை அரங்கேற்றியுள்ளனர் .

LOU (Letter of undertaking ) என்றால் என்ன ?

LOU என்பது வாடிக்கையாளருடன்  வங்கி மேற்கொள்ளும் ஒப்பந்தம் . ஒரு வங்கி தனது வாடிக்கையாளரின் தகுதிக்கு ஏற்ப ஒரு குறிப்பிட்ட தொகைக்கான காப்பீட்டை/ஒப்பந்தத்தை வழங்கும் . அவ்வாறு அந்த வங்கி வழங்கும் ஒப்பந்தத்தை பயன்படுத்தி வெளிநாட்டில் இருக்கும் இந்தியாவின் வங்கி கிளையில் லோன் எடுக்க முடியும் . அவ்வாறு கொடுக்கும் பணத்தை வாங்கியவர்  கட்ட முடியாமல் போனால் ஒப்பந்தம் போட்டுக்கொடுத்த வங்கி தான் லோன் கொடுத்த வங்கிக்கு கொடுக்க வேண்டும் ….
நம்ம ஊர் பாசையில் சொல்ல வேண்டுமானால் வாங்கியவன் கொடுக்காமல் போனால் சாட்சி கையெழுத்து போட்டவனிடம் கேட்போமே அதே தான் .

நிரவ் மோடி செய்தது என்ன ?

நிரவ் மோடி மற்றும் அவரது மூன்று நிறுவனங்கள் தொடர்ச்சியாக 293 க்கு மேற்பட்ட LOU க்களை மும்பையில் இயக்கும் பஞ்சாப் நேசனல் வங்கியில் விதிமுறைகளை மீறி வாங்கி அதன் மூலமாக வெளிநாட்டில் இயங்கக்கூடிய இந்திய வங்கிகளின் கிளைகளில் லோன் பெற்று அங்கு வர்த்தகம் செய்யும் நிறுவனங்களுக்கு கொடுத்துள்ளது .

இதற்கு அந்த வங்கியில் பணியாற்றிய அதிகாரிகளே உதவியுள்ளனர் . கோகுல்நாத் ரெட்டி என்னும் அந்த அதிகாரி ஓய்வு பெற்றுள்ளார் .

இதில் மிகப்பெரிய அவலம் என்னவென்றால் ஒவ்வொரு முறை LOU பெறும்போதும் குறிப்பிட்ட தொகையை கட்ட வேண்டும் . ஆனால் நிரவ் மோடிக்கு கொடுத்த LOU க்களில் ஒன்றிற்கு கூட குறைந்த பட்ச தொகை கூட கட்டவில்லை . அந்த அளவிற்கு அந்த அதிகாரியுடன் கைகோர்த்து ஏமாற்றியுள்ளனர் .

அப்படி வாங்கிய LOU க்களை பயன்படுத்தி வெளிநாடுகளில் இயங்கக்கூடிய அலகாபாத் வங்கி , ஆக்சிஸ் வங்கி உள்ளிட்டவற்றில் லோன் வாங்கப்பட்டுள்ளது .

கடந்த பிப்ரவரி மாதம் ரிசர்வ் வங்கி நேரடியாக ஒரு கடிதத்தை பஞ்சாப் நேசனல் வங்கிக்கு எழுதுகிறது . அதன்படி நிரவ் மோடி பஞ்சாப் நேசனல் வங்கி கொடுத்த LOU க்களின் மூலமாக பெற்ற லோன் தொகையினை உடனடியாக அந்ததந்த வங்கிகளுக்கு பஞ்சாப் நேசனல் வங்கி கொடுக்கவேண்டும் என்பதே .

பாஜகவினர் சொல்வதுபோல காங்கிரஸ் காலத்தில் தான் கொடுக்கப்பட்டதா ?

 

மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அவர்கள் உள்பட பாஜகவினர் அனைவரும் அனைத்து LOU க்களும் காங்கிரஸ் காலத்தில் தான் கொடுக்கப்பட்டது என்கிறார்கள் . ஆனால் சிபிஐ பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள 293 LOU க்கள் கடந்த இரண்டு ஆண்டுகளில் கொடுக்கப்பட்டுள்ளதாக பதிவு செய்திருக்கிறது .

என்ன செய்ய வேண்டும் :

 

யார் காலத்தில் கொடுக்கபட்டது என அடித்துக்கொள்வது பொறுப்பற்ற செயல் . கட்சி என்பதெல்லாம் தேர்தலுக்கு முன்புள்ளதே . ஆட்சி அதிகாரம் ஒன்றே ..அது இந்திய அரசாங்கம் .

ஏழைகளுக்கு லோன் கொடுக்க கொடுக்கும் பணத்திற்கு அதிகமான சொத்து பத்திரங்களை கேட்கும் வங்கிகள் …பணக்காரர்களுக்கு தானே சாட்சியாளராக கையெழுத்து போட்டு கொடுப்பது என்பது கொடுமையிலும் கொடுமை ….கேவலத்திலும் கேவலம் .

இதனை முற்றிலுமாக ஒழித்துக்கட்டிட வேண்டும் . வங்கி நடைமுறைகளை பணக்காரர்களுக்கு தளர்த்துவது தடுக்கப்பட வேண்டும் .

ஒவ்வொரு ஆண்டும் குறிபிட்ட தொகைக்கு மேல் வழங்கப்படும் லோன் முறையாக வழங்கப்படுகிறதா  என ரிசர்வ் வங்கி கண்காணிக்க வேண்டும் .
———
இதுபோன்ற பல தகவல்களை படிக்க இணையதளத்திற்கு வாருங்கள்
https://pamarankaruthu.com
facebook இல் தகவலை பெற லைக் செய்யவும்
https://facebook.com/Pamarankaruthukal/
நன்றி
பாமரன் கருத்து

Share with your friends !
Exit mobile version