வாக்குரிமை என்பது இந்திய அரசியல் அமைப்பு சட்டம் நமக்கு அளித்த உரிமை..நம் நாட்டில் அடுக்குமாடிகளில் குடி இருக்கும் அம்பானிகளின் ஓட்டுக்கு இருக்கும் அதே மதிப்பு தான் அடுப்படியே இல்லாமல் வாழ்க்கை நடத்தும் பாமரனுக்கும்..
நாம் வாக்களிக்கவில்லை என்றால் ஒன்றும் கெட்டு விடாது என்று எண்ணாமல் அனைவரும் தங்களின் ஜனநாயக கடமையை ஆற்றுமாறு வேண்டுகிறேன்
இவன்
ஸ்ரீதரன்
வேணாம்டா வேணாம்டா ஓட்டுக்கு பணம் வேணாம்டா
அன்னை தமிழ் நாட்டுல ஓட்டுக்கு பணம் வேணாம்டா
ஓடி போய் ஓட்ட போடுடா
நல்லாட்சியை தேர்ந்து எடுடா
நான் ஓட்டு போட காசு வாங்குறது இல்லடா
ஆனா காசு கொடுக்கும் ஆள விடுவதில்லைடா
அமைய போகும் நல்லாட்சியை தேர்ந்து எடுப்பவனும் நீ தான்
அதுக்காக வாக்களிக்க செல்ல போவதும் நீ தான்
நம் நாட்டின் முதுகெலும்பாய் இருப்பவனும் நீ தான்
என் சொல்லில் இருக்கும் வாக்களனும் நீ தான்
பணத்துக்காக வாக்களித்து ஏமாந்தவனும் நீ தான்
உன் நாட்டில் அகதிகளாய் திரிபவனும் நீ தான்
குவாட்டர்க்கு ஓட்டு போடும் அறிவாளியும் நீ தான்
போட்டு போட்டு ஏமாந்திடும் பாமரனும் நீ தான்
உண்மையில் வாக்களிப்பவன்
உரிமையை பெறுகிறான்
போதையில் வாக்களிப்பவன்
உரிமையை இழக்கிறான்
உனது ஓட்டும்
எனது ஓட்டும்
நாட்டுகாக டா
நீயும் நானும்
நானும் நீயும்
நினைத்தால்
மாற்றம் உண்டா
உனக்காக நாடு கொடுத்த ஓட்டுரிமை இருக்கு
நீ அதை விற்று அற்ப சுகம் அடைவதும் எதுக்கு
மறக்காமல் நீ சென்று ஓட்டு போடு உனக்கு
ஆனந்தமாய் உன் வாழ்க்கையை நீயே தினமும் நடத்து
காசு கொடுக்காமல் ஜெயித்தால் தான் மதிப்பு
நல்லவனாய் வல்லவனாய் வென்றால் தான் மதிப்பு
பணம் காசு விரும்பாமல் நல்லாட்சி நடத்து
நீ அடுத்தமுறை வென்றால் தான் உன் ஆட்சிக்கு மதிப்பு
தனக்கென வாழ்பவன் பணத்தையே பார்க்கிறான்
பிறர்க்கென வாழ்பவன் மனத்தையே பார்க்கிறான்
ஓட்டை விடவும் உனக்கு வேறு வேலை இல்லையடா
ஓட்டு ஓட்டு
போடடா