தமிழ் வார்த்தை : திருமஞ்சனம்
திருமஞ்சனம் எனும் சொல்லிற்கு மூலவரான திருமாலின் திருமேனிக்கு நறுமண எண்ணெய் பூசுவதாகும். மெய்யஞ்சனம் என்றால் உடம்புக்கு எண்ணெய் பூசுவது. திரு மெய் அஞ்சனம் எனில் திருமாலின் திருமேனிக்கு எண்ணெய் பூசுவது. திரு மெய் அஞ்சனம் என்ற சொல் மருவி திருமஞ்சனம் ஆயிற்று.
இந்த வார்த்தை நாம் பிறவற்றிருக்கும் பயன்படுத்தலாம்.
நீ ஐந்து டிகிரியில்
தலையசை போதும் -உன்னை
திருமணஞ் செய்து
திருமஞ்சனமும் செய்வேன் – பெண்ணே
இனி உங்கள் வழக்கத்தில் திருமஞ்சனம் என்கிற சொல்லும் பயன்படுமாறு பார்த்துக்கொள்ளுங்கள்.