Site icon பாமரன் கருத்து

சிரியா துயரம் – கவிதை

போர்க்கள ஆயுதமெல்லாம்
சமயற்கட்டில் இறங்கியுள்ளன

கட்டில் மறைவும் காப்பாற்றும்
திறனற்று போய்விட்டன

பெற்றோர் இறந்தும் அழக்கூட
நினைவற்று சரிந்துகிடக்கிறேன்

சுவர் விரிசல்களில் வரும்
பிணக்காற்றை சுவாசித்து

அடுக்கு பிணங்களின் மேல்
ஊசலாடும் உயிரோடு

சித்தம் இழந்து
நித்தம் காத்திருக்கிறேன்

படைத்த இறைவனோ
தார்மீக தலைவனோ

அமைதியை தந்திடவே
வந்திடுவானோ இன்றிரவே

வரவில்லை …..

இறைவனும்
தலைவனும்

உயிர் போனது

ஸ்ரீ

Exit mobile version