Site icon பாமரன் கருத்து

சாதியை உண்மையாக ஒழித்துவிட முடியுமா ? எப்போது ஒழியும் ? உண்மை நிலை …

குறிப்பிட்ட இடைவெளியில் கவுரவ கொலைகள் நடந்து கொண்டிருக்கும் இந்த நிலைமையில் சாதி ஒழிப்பு பேச்சுக்களும் வெகு வேகமாக நடந்துகொண்டே இருக்கின்றன ..நாடு சுதந்திரம் வாங்கி 60 ஆண்டுகளை கடந்த பின்பும் கல்வியிலும் பகுத்தறிவிலும் பல பல முன்னேற்றங்களை அடைந்த பின்பும் இன்னும் சாதிய வெறுப்பு செயல்கள் நடந்து வருகின்றன …நாம் நினைப்பது போல அவ்வளவு எளிதாக சாதியை ஒழித்துவிட முடியுமா ? அந்த அளவுக்குத்தான் அது நம்மில் கலந்துள்ளதா ?

பெரியார் போன்ற பகுத்தறிவார்கள் வாழ்ந்த இந்த தமிழகத்தில் இன்னும் சாதிய கவுரவ கொலைகள் நடந்துவருவது இன்னும் மக்களிடம் சாதிய உணர்வுகள்  ஆழ்ந்து கிடப்பாதாகவே படுகின்றது …..
எவ்வளவோ கூட்டங்கள் எவ்வளவோ சட்டங்கள் எவ்வளவோ சலுகைகளை அளித்த பின்னரும்  ஏன் இன்னும் சாதிய உணர்வுகள் அற்ற நிலையை நாம் அடையவில்லை …காரணம் நிறையவே இருகின்றது

பள்ளிகளிலும் வேலை வாய்ப்புகளிலும் ஒதுக்கீடு :

எந்த இட ஒதுக்கீடு சமூகத்தின் விளிம்பில் உள்ளவர்களை மேலே கொண்டுவர உதவுமென்று கருதி மேதைகள் கருத்தினார்களோ இன்று அதே இட ஒதுக்கீடு தான் சாதிய நினைவுகளையும் மனதில் வைத்துக்கொண்டிருக்கின்றது …ஆனாலும் அடிமட்டத்தில் இருந்தவர்கள் மேலே செல்ல இட ஒதுக்கீடு மிக அவசியமான ஒன்றாக இருந்துவருகின்றது ….

எந்த பள்ளியில் சாதியை ஒழிக்க வேண்டும் என்று பாடம் நடத்த படுகின்றதோ அங்கேயே சாதி சான்றிதல் கேட்டு மாணவர்களை குழுக்களாக பிரித்துவிடுகின்றனர் ..அங்கு விதைக்கபட்ட சாதிய உயர்வு தாழ்வு சாகும் வரை வந்துதொலைக்கின்றது …

சமூக நிலைப்பாடு :

என்னதான் சாதிகள் கூடாது என்கிற சமூக சிந்தனை இந்த சமூகத்தில் கிடந்தாலும் ஒரு பிரச்சனை வந்தவுடன் அனைத்து சிந்தனைகளையும் மறந்து சாதிய பிரச்சனையாக மாற்றப்பட்டுவிடுகிறது  …சாதிகளில் உள்ள திணிக்கப்பட்ட ஏற்றத்தாழ்வு தான் இதற்கு காரணம் ..

மேலும் ஒவ்வொரு சாதிக்கென்றும் உள்ள தனித்தனி வழிபாட்டு முறைகளும் பழக்க வழக்கங்களுமே ….இந்த பழக்கவழக்கங்கள் எப்போது ஒழிக்கப்பட்டு ஒரே முறைகள் வருகின்றதோ அப்போது தான் சாதிய உணர்வுகள் குறையும் …

முந்தைய தலைமுறை :

இந்த தலைமுறையினர் பாகுபாடு இல்லாமல் சாதிகளை மறந்து பழகினாலும் முந்தைய தலைமுறையினர் தாழ்ந்த சாதி பயலுகளுடன் பலகாதே அது அவமானம்  என்று பிஞ்சிலேயே சாதிப்பாலை ஊற்றி வளர்க்கின்றனர் ..

சரி அவர்கள் தான் அப்படி என்றால் முயன்று தன் உரிமைகளை பெற நினைக்கும் இந்த தலைமுறை பிள்ளைகளை ‘நாமெல்லாம் தாழ்ந்தவங்க நமக்கு எதுக்கு வம்பு நாம இப்படிதான் இருக்க வேண்டுமென்று’ பிள்ளைகளை அடிமைத்தனத்திற்கு பழக்க படுத்துகிறார்கள் கீழ் நிலையில் இருக்கும் முந்தைய தலைமுறையினர் ..

எப்போது ஒழியும் :

அனைத்து மக்களிடத்திலும் சமநிலையினை ஏற்படுத்தி சாதி சான்றிதல்களை முற்றிலும் ஒழித்து …
அனைத்து கோயில்களிலும் ஓரே வழிபாட்டு நடைமுறையினையும் கொண்டுவந்து
விளிப்புணர்வு பிரச்சாரங்களை மாணவர்களை வைத்து செய்து
சாதிய கட்சிகளை ஒழித்துவிட்டு
பெயர்களில் சாதிகளை குறிக்க கூடாதென்று சட்டம் போட்டு

முயன்றால் இன்னும் பல நூற்றாண்டுகளில் சாதிய எண்ணங்களை மறைக்க முடியும் …..

பல நூற்றாண்டுகள் நிச்சயம் அவசியமே …

Share with your friends !
Exit mobile version