பொதுவாக நாம் சிலநேரங்களில் சிலவற்றை எதிர்த்தாலும் உண்மையை அலசி ஆராய வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம் … சசிகலா அவர்கள் தோழி என்பதை மட்டுமே வைத்துதான் போட்டியில் உள்ளாரா ? உண்மை என்ன அலசலாம் …
அதிமுகவில் ஜெயலலிதா அவர்களுக்கு பிறகு கட்சி பொது செயலாளர் பதவியையும் முதல்வர் பதவியையும் ஏற்று வழிநடத்திட வேண்டுமென்று அதிமுகவின் அனைத்து நிலைகளில் இருந்தும் குறிப்பாக உயர் மட்டத்தில் உள்ள அமைச்சர்களே போயஸ் கார்டன் சென்று அழைக்கும் நிலை உருவாகி உள்ளது …
ஆனால் சசிகலா அவர்களை எதிர்க்க கூடிய பல அடிமட்ட தொண்டர்களும் அதிமுகவின் சில முன்னோடிகளும் குறிப்பாக பொதுமக்கள் பலரும் நினைப்பது எந்த அனுபவமும் திறமையும் இல்லாத சசிகலா அவர்கள் இந்த பதவிக்கு வந்தால் கட்சியே அழிந்து விடும் என்று எண்ணுகின்றனர் ….
ஆனால் எதிர்க்கக்கூடிய அனைவரும் நிச்சயமாக ஒன்றினை மறந்துவிட்டுதான் எதிர்க்கிறார்கள் …அது
உண்மையாலுமே சசிகலா அவர்களுக்கு கட்சி அனுபவம் மற்றும் ஆட்சி அனுபவம் புதிதா என்று ? உண்மையில் இல்லை என்பதே பதில் …
சசிகலா அவர்கள் ஜெயலலிதா அவர்களின் அமைச்சரவையில் தொடங்கி அடிமட்ட வார்டு கவுன்சிலருக்கு ஆள் எடுப்பது வரை அனைத்திலுமே தன் அதிகாரத்தை அல்லது செல்வாக்கினை காட்டி வந்துள்ளார் என்பதே உண்மை . இதை எவராலும் மறுக்க முடியாது ..மேலும் ஆட்சி அதிகாரத்திலும் சசிகலாவின் ஆதிக்கத்தை அனைவருமே அறிய முடியும் .இந்த ஆதிக்கம் அனைத்தும் ஜெயலலிதா அவர்களின் அனுமதியில்லாமல் நடந்திருக்க வாய்ப்பில்லை ..எனவே சசிகலாவின் ஆதிக்கத்தை அவர் விரும்பியே இருக்கிறார் என்றே புரிந்துகொள்ள முடிகின்றது ….
எனவே தான் ஜெயலலிதா அவர்களுக்கு பிறகு கட்சியை வழிநடத்திட அவரை புரிந்துகொண்ட ஒருவரை அதிமுக கட்சியினர் பலர் அழைக்கின்றனர் ..அதிமுக எப்போதுமே ஒரு ரகசியமான கட்டுக்கோப்பான கட்சியாகவே அனைவரிடத்திலும் காட்டப்பட்டு வந்தது …அது இப்போதும் தொடர்வது ஆச்சர்யமே …இது தான் அமைச்சர்கள் போர்க்கொடி தூக்க தடையாக இருந்துவருகிறது ….
பெரும்பலான கட்சி பதவிகளிளும் அரசை நடத்த கூடிய அதிகாரிகள் பணி இடங்களிலும் ஏற்கனவே தங்களுக்கு வேண்டிய பலரை பணியில் அமர்த்தியிருக்கும் சசிகலா அவர்களின் பங்கு தான் இன்று அவரை வீடு வரை வந்து பொறுப்பை ஏற்றுக்கொள்ள அழைக்கின்றது ….முக்கிய தலைவர்களை வெளிபடையாக இப்படி சின்னம்மா என்கிற அளவுக்கு அழைக்க வைத்துள்ளது ….
கட்சியின் தலைவர் இறந்த பிறகு ஒரு இயக்கம் பிளவு படாமல் இருக்கவும் மற்றவர்கள் போர்கொடி தூக்காமல் இருக்கவும் இது நிச்சயமாக காரணமாக இருக்கலாம் …வெளிபடையாக மக்களுக்கு தெரியாமல் இருந்தாலும் ஜெயலலிதா அவர்களுக்கு பிறகு அதிகாரம் கொண்ட அமைப்பு எதுவென்பதை அக்கட்சியினர் உணர்ந்து கொண்டதாலேயே கூட இருக்கலாம் …
அனைவரும் சசிகலா அவர்களை முன் அனுபவம் இல்லை என்றும் தோழியாக இருந்தவர் ஆட்சி நடத்த கூடாது என்றும் எதிர்த்தோமேயானால் அதில் உண்மையில்லை …அவர் கட்சியிலும் ஆட்சியிலும் அதிகாரத்தை செலுத்திக்கொண்டே இருந்தார் என்பதை நாம் மறுக்க முடியாது ….
கடந்த காலங்களில் ஒரு அதிகார மையத்தின் ( எம்ஜியார் , ஜெயலலிதா ) கீழ் இருந்து பழகிவிட்ட அதிமுகவினருக்கு இன்னொரு அதிகார மையமே தேவை படுகின்றது …
இவை அனைத்தோடு சசிகலா அவர்களின் சாதூர்யமான செயல்கள் தான் இன்னும் அவரை போட்டியில் ஓட செய்து கொண்டிருக்கின்றது ( வலிமையான எதிரிகள் இல்லாத போட்டியில் )
பார்க்கலாம் வெல்லப்போவது யாரென்று …..