Site icon பாமரன் கருத்து

காவல் துறையினரை பாராட்டுவோம்

ஆம் நாம் மழைக்கு பயந்து வீட்டிற்குள்ளேயே அடைந்து கிடக்கும் போது அவர்களின் உயிரையும் பொருள்படுத்தாது நமக்காக உதவி வருகின்றார்கள்.
நான் இன்று என்னுடைய பணி  முடிந்து வீட்டிற்கு செல்லும் போது கொட்டுர்புரம் பாலத்திற்கு அருகில் கையில் குடையுடன் வாகங்களை ஒதுக்கிவிட்டு கொண்டு இருந்தனர்.குறிப்பாக பெண் போலீஸ் அதிகாரிகளும் இந்த பணியில் ஈடுபட்டு இருந்தனர்..
எத்தனையோ முறை ஒவ்வொரு சிக்னலிலும் வாகனங்களை நிறுத்தி சோதனை என்ற பெயரில் பணம் வசூலிக்கும் ஒரு சில போலிசுக்காக ஒட்டு மொத்த அதிகாரிகளையும் திட்டி தீர்க்கும் நாம் இன்று அனைத்து அதிகாரிகளும் நமக்காக மழையையும் பொருள்படுத்தாது சேவை செய்யும் போது அவர்களை பாரட்ட வேண்டிய கடமையும் நமக்கு இருக்கின்றது.
பொது மக்களாகிய நாமும் இதனை உணர்ந்து அரசு அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டிய நேரம் இது. இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனம் வைத்து இருப்பவர்கள் இந்த நேரங்களில் பொது வாகன சேவைகளை பயன் பயன்படுத்தினால் சாலைகளில் வாகன நெரிசல்களை தவிர்க்கலாம்.
எப்பொழுதும் அரசையே குற்றம் சொல்லும் நாம் இது போன்ற நேரங்களில் அரசுக்கு உதவியாக இருந்தால் அவர்களாலும் நமக்கு எளிதாக உதவ முடியும்.
காவல் துறை அதிகாரிகளுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் பொது மக்களின் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கின்றோம்.
***ஸ்ரீ***
Exit mobile version