சினிமா பின்புலம் ஏதும் இல்லாமல் வந்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டதினை உருவாக்கி கொண்டவர் திரு விஜயகாந்த் அவர்கள்.
தன்னுடைய அதிரடி சண்டையாலும் புள்ளி விவரங்களை அடுக்கி பேசும் திறமையாலும் தமிழ் ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடித்தார்.
அதே விஜயகாந்த் அவர்கள் அரசியலில் நுழைந்தபோது அவருடைய ரசிகர்களும் பெரும்பாலான இளைய வயதினரும் அவருக்கு ஆதரவு தெரிவித்து அவரை மக்கள் பிரதிநிதியாக 2006 ம் ஆண்டு விருத்தாச்சலம் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுத்து சட்டமன்றத்திற்கு அனுப்பினர்.மேலும் அவரது கட்சி தேர்தலில் கணிசமான வாக்கு சதவீதம் பெற்றது.
அதன் பிறகு அவரை கூட்டணியில் சேர்க்க எதையும் தர திராவிட கட்சிககட்சிகள் முன்வந்தன. 2011ம் ஆண்டு அதிமுகவிடம் கூட்டணி வைத்து கணிசமான இடங்களை பெற்று ரிஷிவந்தியம் தொகுதியில் இருந்து மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். திமுக போன்ற பெரும் கட்சிகளை பின்னுக்கு தள்ளி எதிர் கட்சியாக அமர்ந்தது.
ஒரு மிக சிறந்த வாய்ப்பாக அமைந்த எதிர் கட்சி தலைவர் என்ற பொறுப்பினை கையாள விஜயகாந்த் அவர்களுக்கு தெரியவில்லை என்றே சொல்ல வேண்டும். மக்கள் மன்றத்தில் சண்டை போடுவதும் நாக்கை துருத்துவதும் நடுநிலையான மக்கள் மத்தியில் அவரது மதிப்பினை கெடுத்தது. புள்ளி விவரங்களை படங்களில் அடுக்கி பேசும் விஜயகாந்த் அவர்களால் சட்டமன்றத்தில் அவ்வாறு பேச முடியவில்லை.
தேமுதிக அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக வெளியேறியது. இது அந்த கட்சிக்கு பெரும் பின்னடைவை உண்டாக்கியது.
தேமுதிகவின் மிக முக்கிய நபராக இருந்த பண்ட்ருட்டி ராமச்சந்திரன் அவர்கள் விஜய்காந்துடன் ஏற்பட்ட வேறுபாட்டால் மீண்டும் தாய் கழகமான அதிமுகவிற்கே சென்றார். இதுவே தேமுதிகவுக்கு முதல் பெரிய அடி.அவர் வெளியேறினாலும் அப்போது தேமுதிகவுக்கு மதிப்பு குறையாமல் இருந்தது என்றே சொல்ல வேண்டும்.
நடந்து முடிந்த தேர்தலில் தேமுதிக நிட்சயமாக திமுகவில் இணையும் என்றே அனைவரும் நினைத்தனர்.திமுக தலைவர் கருணாநிதியும் தேமுதிகவின் வாக்கு வங்கியை கருத்தில் கொண்டு பழம் நிச்சயம் நழுவி பாலில் விழும் என்றெல்லாம் பேசினார். விஜயகாந்த் அவரது மனைவி பிரேமலதா அவர்களின் பேச்சை கேட்டுக்கொண்டு மக்கள் நல கூட்டணியில் இணைந்ததாக கூறப்படுகின்றது. திமுகவின் எதிரிகளில் ஒருவரான வைகோ அவர்களின் வலையில் விஜயகாந்த் சிக்கிக்கொண்டார் என்பதே உண்மை.
இதை கண்டு அதிர்ந்த திமுக தேமுதிகவை உடைக்கும் வேலையில் இறங்கியது. மக்கள் தேமுதிக என்ற கட்சி உருவாகி திமுகவுடம் கூட்டணியில் சேர்ந்தது.
மக்கள் நல கூட்டணியும் அதன் தலைவர்களும் மிக மோசமான தோல்வியை சந்தித்தனர்.. அந்த தேர்தலில் விஜயகாந்த் அவர்கள் படு தோல்வியை சந்தித்தார். விஜயகாந்த் அவர்களின் பேச்சுக்களும் அவரின் செயல்பாடுகளும் ஒரு நகைச்சுவையை போலவே இருந்தது. ஒரு நாட்டினை ஆள்வதற்கான தகுதி உள்ளவராக விஜயகாந்த் தன்னை காட்டிக்கொள்ள தவறிவிட்டார். இதனால் மக்கள் மனதில் கதாநாயனாக வேண்டியவர் காமெடியனாக குடியேறினார். சமூக வலைத்தளங்களிலும் செய்தி சேனல்களிலும் அவர் ஒரு காமெடியனாக காட்டப்பட்டார்.
திமுகவும் பல தொகுதிகளில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. நிச்சயமாக தேமுதிக திமுக கூட்டணியில் இடம் பிடித்திருந்தால் திமுக ஆட்சியில் அமர்ந்து இருக்கும். தேமுதிகவும் கணிசமான இடங்களை பெற்று இருக்கலாம்.
தோல்விக்கு பிறகும் திமுக தேமுதிகவை உடைக்கும் வேலையில் மும்முரமாக ஈடுபட்டது. அதன் பலனாக தினமும் சில நிர்வாகிகள் தேமுதிகவில் இருந்து விலகி திமுகவில் இனைந்து வருகின்றனர். இன்று மிக முக்கிய நபர்கள் யாரும் இல்லாத கட்சியாகவே தேமுதிக இருக்கின்றது.
மேலும் ஊடகங்கலும் அன்றாடம் தேமுதிக காணாமல் போய்விட்டதை போன்றே செய்தி வெளியிடுகின்றன. இதனாலும் தேமுதிக அடிமட்ட தொண்டர்கள் நம்பிக்கை இழந்து வேறு காட்சிகளில் இணைந்து வருகின்றனர்.
அரசியல் பயணத்தில் அனைத்து கட்சிகளுக்குமே இந்த நிலைமை கண்டிப்பாக வரும். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக அடைந்த தோல்வியை கூட எடுத்துக்காட்டாக கூறலாம். ஆனால் அதன் தலைவர் கருணாநிதி அவர்களின் அனுபவத்தாலும் திறமையாலும் இந்த தேர்தலில் 80க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றி தனக்கான இடத்தை தக்க வைத்துக்கொண்டுள்ளது.
அதே அனுபவம் விஜயகாந்திடம் உள்ளதா என்றால் கேள்விக்குறியே??
நன்றி
ஸ்ரீ