ஒருவர் பேருந்து ஓட்டுகிறார் , இன்னொருவர் ஆட்டோ ஓட்டுகிறார் , பேருந்தின் டயரை தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை செய்யும் தொழிலாளி பேருந்தில் பயணிக்கிறார் ,பேருந்து ஓட்டுநர் பயன்படுத்தும் மொபைலை மற்றொருவர் தயாரிக்கிறார் …
ஆக அவருக்காக இவரும் இவருக்காக அவரும் இதேபோல் தான் உலகம் முழுவதுமே ஒருவர் மாற்றுவருக்காக வாழ்ந்து வருகின்றோம் …இதில் புதிய கண்டுபிடிப்புகள் சிந்தனை கருத்துக்கள் போதனைகள் என அடுத்த தலைமுறைக்கும் சேர்த்து சிலர் செய்துவிட்டு போகின்றோம் …
சரி நாம் ஏன் வேலை செய்ய வேண்டும் சாப்பாட்டுக்காகவா ..அப்படியே வைத்துக்கொண்டாலும் வெறும் உழவுத்தொழில் மட்டும் தானே செய்திருக்க வேண்டும் …ஏன் சாப்பாட்டுக்கு சம்பந்தம் இல்லாத கண்டுபிடிப்புகளும் தொழில்களும் வந்தன …
ஆக நாம் பிறந்த நோக்கம் சாப்பிடவும் உயிர் வாழவும் மட்டுமே அல்ல ..வேறு ஏதோ ஒன்று நிச்சயமாக இருக்கவேண்டும் …தினமும் மனிதன் கண்டுபிடித்துக்கொண்டே இருக்கிறான்
முன்பு நேரில் மட்டுமே பேச முடியும்
இப்போது மொபைல் வந்துவிட்டது
முன்பு நேரில் மட்டுமே பார்க்க முடியும்
இப்போது டிவி வந்துவிட்டது
இதைப்போல இண்டெர்நெட் மருத்துவத்தில் கண்டுபிடிப்பு வானியலில் கண்டுபிடிப்பு என உயர்ந்துகொண்டே போகின்றது …
மனிதனும் அதற்கடுத்த கண்டுபிடிப்புகளை நோக்கியே ஓடுகிறான் …இதில் மனிதர்கள் மாறுகிறார்கள் ஆனால் நோக்கம் அதற்கடுத்த கண்டுபிடிப்பை நோக்கி தான் இருக்கின்றது
ஆக மனித இனம் ஓடிக்கொண்டிருப்பது
ஏதோ ஒன்றினை கண்டுபிடிக்கவே ..இந்த கோணத்தில் பார்த்தால் எது அவனது கடைசி கண்டுபிடிப்பாக இருக்க முடியுமோ அதற்காகவே அவன் படைக்க பட்டிருப்பான் ..அதனை கண்டுபிடிக்க போகும் அறிஞர்களுக்கு உதவியாகவே பிள்ளைகளை பெற்று வளர்த்து அறிவூட்டி சமுதாயத்திற்கு அளித்து வருகின்றோம் …கடமை என்கிற போர்வையில் நம்மையும் அறியாமல் …
சரி ….அப்படி என்ன கண்டுபிடிப்பு கடைசி கண்டுபிடிப்பாக இருக்க முடியும் …
இறந்த உடலில் உயிரை தூண்டுவதாக (கடவுள் ) இருக்கலாம்
செடி உணவினை உற்பத்தி செய்வதை அறிவதாக இருக்கலாம்
சூரிய மண்டலத்தை உருவாக்கியவர் யாரென்று கண்டு பிடிப்பதாக இருக்கலாம்
நம்மை இந்த கிரகத்தில் விட்டு சென்ற மூதாதையர்களை அடைந்ததாக இருக்கலாம்
ஈர்ப்பு விசையின் மூலாதாரம் அறிவதாக இருக்கலாம்
காற்று பூமியில் மட்டும் ஏன் உள்ளதென்பதாக இருக்கலாம்
இதனை விட வேறுதுவாக கூட இருக்கலாம் …ஆனால் நாம் எதையோ அறிவதற்காகவே இப்படி வாழ்ந்துகொண்டிருக்கிறோம் …நம்மையும் அறியாமலே நாம் எதையோ தேடித்தான் செல்கிறோம் …
இந்த கடமைகள் தான் நம்மையும் அறியாமலே பிள்ளைகளை பெற்று வளர்த்து இந்த சமூகத்திற்கு கொடுத்துக்கொண்டே வருகிறோம் …நினைத்து பாருங்கள் ஏன் ஒவ்வொருவரும் தங்கள் பரம்பரை தங்களுக்கு பிறகு இங்கு இருக்க வேண்டும் என்கிற ஆசை கொண்டுள்ளனர் ..
தங்களுக்கு பிறகு கடமை ஆற்றவும் புதிய கண்டுபிடிப்பில் தன் பரம்பரையின் பங்கும் இருக்க வேண்டும் என்று எண்ணியே அவர்களுக்கும் தெரியாமல் பிள்ளைகளை பெற்று வளர்ப்பதை
கடமையாக செய்து வருகின்றனர் ….
நான் சொன்ன கண்டுபிடிப்பில் பிழை இருக்கலாம் ஆனால் நம் மனித இனம் ஏதோ ஒரு தேடலில் இருக்கின்றது ..
இது உண்மை ….
ஸ்ரீ