Site icon பாமரன் கருத்து

ஆட்டோ அதிக கட்டணம் – இதற்காகத்தான் ஆட்டோக்காரர்களை விட்டுவிலகி ஓலா உபேர் டாக்ஸியை நாடி செல்கின்றோம்

ஆட்டோ அதிக கட்டணம்

இருநிமிட பதிவு :

இதற்காகத்தான் ஆட்டோக்காரர்களை விட்டுவிலகி ஓலா உபேர் டாக்ஸியை நாடி செல்கின்றோம்

வீட்டிலிருந்து கிளம்பி நண்பரை காண செல்ல கிளம்பினேன் . வழக்கமாக ஓலா வில் ஆட்டோ அல்லது உபேர் இல் டாக்ஸி எடுத்து செல்வது வழக்கம் . அன்றும் அதேபோல உபேரில் போக வேண்டிய இடத்திற்க்கான கட்டணத்தை பார்த்தேன் , 55 ரூபாய் காட்டியது …

வெயிலில் சவாரி ஏதும் கிடைக்காமல் இருக்கும் ஆட்டோகாரர்களை பார்த்தவுடன் உபேரில் புக் செய்வதை நிறுத்திட்டு அவர்களிடம் செல்லவேண்டிய இடத்தினை கூறி எவ்வளவு ஆகும் என்று கேட்டேன் . முதல் ஆட்டோக்காரர் 80 ரூபாய் ஆகும் என்றார் ..

ஆட்டோ அதிக கட்டணம்

நான் 60 க்கு வருமா என்று பேசிப்பார்த்தேன் .
முதல் ஆட்டோகாரர் ரேட்டை குறைக்கவில்லை என்றவுடன் உபேரில் புக் செய்யலாம் என்று கிளம்ப முயன்றபோது இன்னொரு ஆட்டோக்காரர் வந்து வாங்க சார் போகலாம் என்றார் …நானும் 60 க்குத்தான் வருகின்றார் என்று ஏறி அமர்ந்தேன் .

இறங்குமிடம் வந்தவுடன் நான் 60 ரூபாயை எடுத்து நீட்டினேன் . அதற்கு அவர் இங்க வர்றதுக்கு எப்பவுமே 80 ரூபாய்தான் என்று வாக்குவாதம் செய்ய ஆரம்பித்துவிட்டார் . நான் அந்த ஆட்டோக்காரரிடம் 60 க்கு கேட்டு வரலைன்னு தான கிளம்புனேன் , நீங்க தான வாங்க போலாம்னு சொன்னிங்க …என்று பேசியும் பயனில்லை ..

வேறு வழியில்லாமல் 80 ரூபாயை கொடுத்துவிட்டு போனேன் ..ஆனால் அன்று முடிவு செய்தேன் இனி இந்த ஆட்டக்காரர்களை நம்ப கூடாது என்று ..
அவர்களுக்கு உதவ நினைத்து நாம் ஏன் துன்பப்படனும் என்ற எண்ணம் தான் வந்தது .

சில ஆட்டோக்காரர்களின் உண்மையற்ற செயல்களினால் ஒட்டுமொத்த ஆட்டக்காரர்களின் மீதான நம்பிக்கையும் குறைகின்றது அதனால் அவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படுகின்றது ..

நன்றி
ஸ்ரீ

Share with your friends !
Exit mobile version