Site icon பாமரன் கருத்து

ஆக்மெண்டெட் ரியாலிட்டி (Augmented reality) – போகி மேன் கேம் – அறிவியல் அறிவோம் ..

ஆக்மெண்டெட் ரியாலிட்டி (Augmented reality) – போகி மேன் கேம்

இருபதாம் நூற்றாண்டில் தான் மனித வளர்ச்சியின் பாதையில் பெரும்பாலான அறிவியல் முன்னேற்ற கண்டுபிடிப்புகள் கண்டுபிடிக்கப்பட்டது. குறிப்பாக தொலைத்தொடர்பு சாதனங்களின் வளர்ச்சி அசுர வேகத்தில் சென்று கொண்டிருக்கின்றது.

இதில் தற்போது ஆக்மென்ட் ரியாலிட்டி (Augmented reality) வந்து சேர்ந்துள்ளது. ஆக்மென்ட் ரியாலிட்டி என்பது விர்ச்சுவல் ரியாலிட்டி (Virtual reality) என்ற தொழில்நுட்பத்தின் முன்னேற்றமே.

விர்ச்சுவல் ரியாலிட்டி (Virtual reality) :

இந்த தொழில்நுட்பத்தில் உபயோகிப்பாளர் விர்ச்சுவல் ரியாலிட்டி ஹெட்செட் அணிதிருக்கவேண்டியது அவசியம். இந்த தொழில்நுட்பத்தில் உபயோகிப்பாளர் விர்ச்சுவல் உலகில் இருப்பதை போன்று தோன்றும். அதிகபட்சமாக பார்ப்பதோடு சேர்த்து சத்தம்,வாசனை ,கேட்டல்,தொடுதல் போன்ற உணர்வுகளையும் சென்சாரின் உதவிகொண்டு அனுபவிக்க முடியும்.

உதாரணமாக ஒரு துப்பாக்கி சுடுதல் விளையாட்டில் (Gun Game ) விர்ச்சுவல் ரியாலிட்டி கண்ணாடி  அணிந்து கொண்டு விளையாடும் போது நம்முடன் கேம் இணைக்கப்பட்டிருக்கும். அந்த கண்ணாடியை அணிந்து கொண்டு தலையை திருப்புவதன் மூலமாக திரையிலும் நாம் திரும்புவோம். எளிமையாக சொல்லபோனால் இடது வலது பட்டன்களை அழுத்தி கணினி திரையில் பார்ப்பதற்கு பதிலாக நம் தலையை சரியான திசையை நோக்கி திருப்பி நாம் செய்ய வேண்டியதை செய்யலாம். நாம் எந்த பக்கமாக தலையை திருப்பி சுட  வேண்டிய இடத்தினை உண்மையாக பார்ப்போமா அதை போலவே கண்ணாடி அணிந்துகொண்டு தலையை திருப்பினால் நம்மால் சுட வேண்டிய இடத்தினை பார்க்கமுடியும். கீழே குனிவது நடப்பது போன்ற நமது செயல்கள் அனைத்தையும் நம் கண்களால் 3டி  கோணத்தில் பார்க்க முடியும்.

எளிமையாக சொல்லப்போனால் 3டி முறையில் அனுபவிப்பதே விர்ச்சுவல் ரியாலிட்டி.

ஆக்மெண்டெட் ரியாலிட்டி : 

விர்ச்சுவல் ரியாலிட்டி தொழில்நுட்பத்தில் இருக்கும் அனைத்து விஷயங்களும் இதில் இருக்கும். விர்ச்சுவல் ரியாலிட்டி முறையில் நாம் உண்மையில் இருக்கும் இடத்திற்கும் திரையில் தெரிவதற்கும் தொடர்பு இருக்காது ஆனால் ஆக்மெண்டெட் தொழில்நுட்பத்தில் நாம் இருக்கும் இடத்திற்கும் நாம் திரையில் காணும் இடத்திற்கும் முழு சம்பந்தம் உண்டு. . உங்கள் கருவியில் இருக்க கூடிய GPS மற்றும் கேமரா வசதியை கொண்டு தகவல்கள் சேகரிக்கப்பட்டு அது உங்கள் திரையில் உருவாக்கம் செய்து காட்டப்படும்.

குறிப்பாக உருவாக்கம் செய்யப்பட்ட தகவல்களுடன்  கம்ப்யூட்டரின் உதவி கொண்டு வேறு சில தகவல்களையும் சேர்த்து பயனாளிகளின் திரையில் காட்ட முடிவதே ஆக்மெண்டெட் ரியாலிட்டி தொழில்நுட்பத்தின் சிறப்பு.

போகி மேன் கேம் : 

ஆக்மெண்டெட் ரியாலிட்டி தொழில்நுட்பத்திற்கு மிகசிறந்த உதாரணம் போகி மேன் கேம். இந்த கேமில் நீங்கள் இருக்க கூடிய பகுதியின் தகவல்கள் உங்கள் ஸ்மார்ட் போனில் இருக்க கூடிய கேமரா மற்றும் GPS  உதவி கொண்டு சேகரிக்கப்பட்டு உங்கள் திரையில் காட்டப்படும். அதோடு மட்டுமில்லாமல் கம்ப்யூட்டரின் உதவி கொண்டு உங்களுக்கு அருகில் உள்ள பகுதியில் ஒரு பூச்சியையோ விலங்கையோ உங்கள் திரையில் கட்டிட செய்வார்கள். நீங்கள் அந்த பூச்சியை பிடிக்க அந்த இடத்திற்கு உண்மையாலுமே நடந்து செல்லவேண்டும். அப்படி செல்லும் போது உங்கள் போன் திரையில் நீங்கள் அந்த பூச்சி இருக்கும் இடத்தினை நோக்கி செல்வது தெரியும். இதில் அந்த பூச்சி தான் கம்ப்யூட்டர் கொண்டு கூடுதலாக இணைக்கப்பட்ட தகவல். உண்மையாலுமே அந்த இடத்தில் பூச்சியோ விலங்கோ இருக்காது. உங்கள் மொபைல் போனை அந்த இடத்திற்கு அருகில் கொண்டு சென்றால் பூச்சியினை பிடித்துவிடலாம் உங்கள் ஸ்கோர் உயரும்.

வளர்ச்சியில் இதன் பங்கு :

வெறும் விளையாட்டிற்கு மட்டும் இந்த ஆக்மெண்டெட் ரியாலிட்டி பயன்படுகிறதா என்றால் இல்லை. இதனை கொண்டு பல தொழில்நுட்ப மேம்பாடுகளை செய்திட முடியும்.

உதாரணமாக இன்டெர்ன்ட் உடன் இணைக்கப்பட்ட கேமரா , GPS  இருந்தால் உங்களால் மொபைல் போன் இல்லாமலே கால் செய்திட முடியும்.

உங்களால் கேமராவை எடுக்காமல் வெறும் கைகளை மட்டும் சொடுக்கி புகைப்படம் எடுக்க முடியும்.

அப்படி எடுத்த புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் ஷேர் செய்ய கம்ப்யூட்டர் தேவை இல்லை. அருகில் உள்ள சுவரின் உதவி கொண்டே உங்களால் போட்டோவை தேர்ந்தெடுத்து ஷேர் செய்ய முடியும்.

இவை அனைத்தும் இனிமேல் செய்ய கூடியவை என்று சொல்லவில்லை. ஏற்கனவே செய்து கட்டிவிட்டார்கள்.

இந்த வீடியோவில் பிரநாவ் மிஸ்ட்ரி என்கிற மாணவர் சிக்ஸ்த் சென்ஸ் என்கிற பெயரில் ஆக்மெண்டெட் ரியாலிட்டி தொழில்நுட்பத்தை நிரூபித்து காட்டியுள்ளார்.

அறிவியல் அறிவோம்!

நன்றி
ஸ்ரீ

Share with your friends !
Exit mobile version