இவர்களை அலட்சியம் செய்யாதீர்கள்
பரபரப்பாகவும் அதிவேகவும் விசேசங்களுக்கோ அலுவலகத்திற்கோ வாகனத்தில் சென்றுகொண்டிருக்கும்போது சில தினங்களில்
சாலை நிறுத்தங்களில் முகம் தெரியாத பெயர் அறியாத ஒரு இளைஞர் கூட்டம் கைகளில் பதாகைகளையும் சைகைகளையும் காட்டிக்கொண்டிருப்பார்கள் .வாகன விதிகள் .
என்ன நடந்தது :
இன்று டைடெல் பார்க் சாலை நிறுத்தத்தில் தோழன் என்கிற அமைப்பை சேர்ந்த இளைஞர்கள் சாலை விதிகள் அடங்கிய பதாகைகளை முன்புறமும் முதுகு பக்கமும் தொங்கவிட்டுக்கொண்டே ஹெல்மெட் அணியாதவர்களிடம் அதனால் ஏற்படக்கூடிய ஆபத்து குறித்தும் சீட் பெல்ட் அணியாத காரில் பயணிப்பவர்களிடம் அதை அணிந்துகொண்டு பாதுகாப்பாக பயணம் செய்யுமாறும் அன்பாக அறிவுரை வழங்கி கொண்டிருந்தனர் .
பலர் அவர்களின் கோரிக்கையை ஏற்றும் சிலர் அவர்கள் அருகிலே வருவதற்கு முன்பாகவே தங்களது ஹெல்மெட் , சீட் பெல்ட் ஆகியவற்றை அணிவதை காண முடிந்தது .
அலட்சிய படுத்த வேண்டாமே :
இது நடந்து கொண்டிருக்கும்போதே , ஒரு காரில் ஒரு இளைஞர் மற்றும் ஒரு இளைஞி அமர்ந்திருந்தார்கள் . அவர்களிடம் சென்று சீட் பெல்ட் அணியுமாறு அந்த நபர் கூறுகிறார் . அதை கேட்ட அந்த பெண் சீட் பெல்ட் அணிய முயற்சித்தார் , ஆனால் ஓட்டுநர் இருக்கையில் இருந்த இளைஞர் சீட் பெல்ட் அணியவே இல்லை தோழன் அமைப்பை சேர்ந்த அந்த நபர் எவ்வளவு சொல்லியும் .
ஆனால் அவர் அந்த இடத்தை விட்டு சென்ற பிறகு ஓட்டுநர் இருக்கையில் இருந்த நபர் சீட் பெல்ட் போட்டுக்கொண்டார் . அந்த பெண்ணும் .
அதைஅந்த தோழன் அமைப்பை சேர்ந்த நபர் கூறும்போது இவர் செய்யவில்லை . காரணம் அவன் சொல்லி நாம் கேட்டால் நம் பெருமை குறைந்துவிடும் என்கிற எண்ணம் காரணமாக இருக்குமோ ?
அடுத்தாக இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் இல்லாமல் இரண்டு இளைஞர்கள் நின்றார்கள் . அவர்களிடம் இவர் ஹெல்மெட் அணிவதன் முக்கியத்துவத்தை கூறிடும்போது அவர் யாருக்கோ சொல்வதைப்போல தலையை வாரிக்கொண்டு இருக்கிறார் . இதே விசயத்தை காவல்துறை அதிகாரி சொன்னால் தலையை வாரிகொண்டு இருப்பாரா அந்த இளைஞர் என்று தெரியவில்லை .
என்ன செய்ய வேண்டும் :
நமக்காக தங்களது வேலையை விட்டுட்டு நம்மை போன்ற இளைஞர்கள் நன்மையை எடுத்து கூறிடும்போது அதனை நாம் செய்ய வேண்டும் .
செய்ய விருப்பமில்லை என்றால் குறைந்தபட்சம் அவர்களை அலட்சியம் செய்யாமல் இருக்கலாம் .
குறிப்பாக கூட பயணிக்கும் உறவுகள் ஹெல்மெட் அணிய சொல்லலாம் , சீட் பெல்ட் போட சொல்லலாம் . யாரோ ஒருவர் சொன்னால் தானே செய்ய மறுக்கிறார்கள் நீங்களே சொன்னால் மறுக்க மாட்டார்கள் .
நன்றி
பாமரன் கருத்து