Site icon பாமரன் கருத்து

அரசியல் விளையாட்டில் ஜெ மரணம் ? படிங்க …

அரசியல் விளையாட்டில் ஜெ மரணம்

ஜெயலலிதா இறந்ததாக டிசம்பர் 5 மாலையே சில டிவி களில் பிரேக் நியூஸ் போடப்பட்டது ..உடனடியாக அதனை அப்பொலோ நிருவாகம் மறுத்து தீவிர சிகிச்சை மேற்கொண்டிருப்பதாக அறிவித்தது ..பிறகு இரவு 11 .30 க்கு அதிகாரப்பூர்வமாக ஜெயலலிதா இறந்துவிட்டதாக செய்தி வெளியிடப்படுகின்றது ..

ஜெயலலிதா இறந்த உடனே பன்னிர்செல்வம் தலைமையாலான அரசு நள்ளிரவிலேயே பதவியேற்கின்றது …அதன்பிறகு அடக்கம் நடைபெருகிறது ..அப்போதே பெரும்பாலான மக்களிடத்தில ஜெயலலிதா மரணம் தொடர்பான சந்தேகங்கள் பேசப்படுகின்றன …அதற்கு ஜெயலலிதாவை உடல்நலம் விசாரிக்க சென்ற எவரும் நேரடியாக அவரை பார்க்கவில்லை என்று கூறியதும் காரணமாக அமைந்தது .

அரசியல் விளையாட்டில் ஜெ மரணம்

அமைதியாக இருந்த புலிகள் :

இன்று துள்ளிக்குதித்து போராட்டம் நடத்திடும் பன்னிர்செல்வம் முதல்வராக பதவியேற்ற பின்பு ஜெயலலிதா மரணம் தொடர்பாக எந்த சந்தேகமும் தெரிவிக்க வில்லை .

இப்போது அதிரடியாக கருத்து தெரிவித்து வரும் பொன்னையன் மாபா பாண்டியராஜன் உள்பட அனைவருமே சசிகலா அணியில் இருந்தவரை பன்னிர்செல்வத்தை எதிர்த்தும் ஜெயலலிதா மரணத்தில் எந்த சந்தேகமும் இல்லை என்றும் பல அறிக்கைகளை விட்டனர் .

ஆனால் அதே நபர்கள் பன்னிர்செல்வம் அணிக்கு வந்தபிறகு ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருகின்றது , விசாரிக்க வேண்டும் என்று குரல் கொடுக்கும்போது அவர்களின் இரட்டை நிலைப்பாட்டால் அவர்களின் பேச்சை எப்படி நம்புவது .

அரசியல் விளையாட்டில் ஜெ மரணம் :

பன்னிர்செல்வம் அணி உருவாவதற்கு முன்பாகவே அதிமுக முன்னால் சபாநாயகர் PH பாண்டியனும் அவரது மகனும் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உரக்க கூறினர் ..
பிறகு OPS அணி உருவானவுடன் வந்து இணைந்துகொண்டனர் .

ஒரு சாதாரண மனிதனாக அவர்கள் தெரிவிக்கும் கேள்விகள் அனைத்துமே ஜெயலலிதா மரணத்தில் இருக்கின்ற சந்தேகத்தை உறுதி செய்வதாகவே இருகின்றது ..

ஒரு முதல்வராக இருந்தவரின் மரணத்தில் இவ்வளவு சந்தேகமா என்றால் அதிர்ச்சியாக இருகின்றது . இத்தனை சந்தேகங்களை தெரிவித்தபின்னரும் வெறும் மருத்துவ அறிக்கைகளை மட்டுமே வெளியிட்டுக்கொண்டிருப்பது சந்தேகத்திற்கு மேலும் வலு சேர்கின்றது .

அரசியல் விளையாட்டில் ஜெ மரணம் :

குடியரசு தலைவரிடம் முறையிட்டாச்சு பிரதமரிடம் முறையிட்டாச்சு மக்கள் மன்றத்திலும் முறையிட்டாச்சு ..ஆனால் விசாரனை இன்னும் நடத்தப்படவில்லை . ஆனால் அவரின் மரணத்தை வைத்து அரசியல் செய்வது மட்டும் நடந்துகொண்டிருக்கிறது .
மத்திய அரசும் அதனை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது ..

அரசியல் விளையாட்டுகளில் வரும் ஆதாயங்களை புறம்தள்ளி ஒரு முதல்வராக இருந்தவரின் மரணத்தில் துளிகூட சந்தேகம் எவருக்கும் இருக்க கூடாது என்பதை உணர்ந்து மத்திய அரசு ஒரு விரிவான நம்பிக்கையான விசாரனை மேற்கொண்டு தெளிவு படுத்த வேண்டும் …

பாமரன் கருத்து

Exit mobile version