Site icon பாமரன் கருத்து

அமெரிக்க அதிபரின் சீண்டும் கருத்துக்கள் …என்னவெல்லாம் நடக்க போகிறதோ ….

தற்போது நடந்த தேர்தலில் போட்டியிட்ட டிரம்ப் வெற்றி பெற்று அதிபராக போகிறார் ..தேர்தல் களத்தில் இருக்குபோது பல அதிரடியான கருத்துகளை வெளியிட்டவர் …இவர் எப்படியும் தேர்ந்தெடுக்கப்பட மாட்டார் என்று பெரும்பாலனவர்கள் கருதியதால் இவருடைய கருத்தினை பெரும்பாலனவர்கள் கண்டுகொள்ளவில்லை .

ஆனால் அவர்தான் அடுத்த அதிபர் என்று முடிவாகிவிட்ட நிலையில் இன்றும் தொடர்ந்து மற்ற நாடுகளை சீண்டுவது போன்றே தனது கருத்துக்களை வெளியிட்டு வருகின்றார் .இந்த உலகின் மிகபெரிய ஆளுமையான அமெரிக்காவை வழிநடத்த போகும் டிரம்ப் இன் கருத்துகள் பெரிய தாக்கத்தை எற்படுத்தும் …

உதாரணமாக , வடகொரியாவினால் அமெரிக்கா கண்டத்திற்குள் ஏவுகணையை விட முடியாது என்று சவால் விட்டுள்ளார் டிரம்ப் ..முன்பு வடகொரியா சர்வாதிகாரி கிம் ஜங் யுன்  நாங்கள் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை உருவாக்குவதாகவும் எங்களை யாரும் ஒன்றுமே பண்ண முடியாது என்றார் …இதற்கு பதிலளித்தே டிரம்ப் அவ்வாறு கூறினார் …

இதில் என்ன தவறு என்கிறீர்களா , வடகொரிய அதிபர் ஒரு சர்வதிகாரி என்றும் அமெரிக்காவை அழிக்கும் எண்ணம் கொண்டவரென்றும் சில வேளைகளில் மனநிலை சரியில்லாதவர் என்று கூட பேச்சு இருக்கின்றது ….

ஆக அவரை சீண்டும் படியான கருத்துக்கள் மேலும் அமைதியின்மையை மட்டுமே ஏற்படுத்தும் . அடங்கி போக வேண்டுமா என்றால் அடங்கி போகவேண்டிய அவசியமே இல்லை …உலக நாடுகளை இணைத்து பொருளதார தடைகளை அதிகரிக்கலாம் அல்லது பேச்சுவார்த்தை நடத்திடலாம் …

வடகொரிய அதிபர் சர்வதிகாரி அமெரிக்க அதிபர் ஐனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டவர் .எனவே அவரது கருத்தில் அமெரிக்க மக்களின் நலனும் கருத்தும் அடங்கியிருக்க வேண்டும் .

ஒருவேளை இதுப்போன்ற கருத்துகளை கண்ட அந்த சர்வதிகாரி ஏவுகணையை ஏவினால் உலக அழிவின் தொடக்கமாக அது அமையும் ….

Exit mobile version