அடிவாங்கும் தமிழக மீனவர்கள் :
மீண்டும் ஒரு உயிர் பலியாயிருக்கின்றது . இதற்கு மத்திய அரசிடமிருந்தோ தமிழக அரசிடமிருந்தோ தீர்வுக்கான பதில் எதுவும் கிடைக்கவில்லை . மாறாக வழக்கம்போல 5 லட்சம் நிதி ஒதுக்குகிறது …நிதி ஒதுக்குவதில் தவறில்லை ஆனால் இன்னொரு உயிர் போய்விட கூடாது என்பதற்கான நடவெடிக்கைகள் ஏதுமில்லாதது வருத்தமே .
இந்தியாவின் பாதுகாப்பினை அடிப்படையாக கொண்டு இலங்கையுடன் நட்பு பாராட்டுவது தவறில்லை ..ஆனால் தொடர்ச்சியாக தன் நாட்டு மக்கள் தாக்கப்பட்டு கொண்டிருக்கும்போது ஆறுதலும் நஷ்ட ஈடும் கொடுப்பது முறையாகாது …
பொதுவாக தமிழ்நாட்டு மீனவர்களை இந்திய மீனவர்களாக எண்ணுவது கிடையாது என்கிற பேச்சு உண்டு . தமிழகம் இந்தியாவின் வேறொரு அங்கம் போன்ற தோற்றம் தான் மத்திய அரசு இந்த விசயத்தில் காட்டும் அக்கறையை வைத்து பார்த்தால் நமக்கும் தோன்றுகிறது ..
ஒவ்வொருமுறை எல்லையில் போர் வீரர்கள் இறக்கும் போது இந்திய அரசு எப்படி உணர்வுடன் துரிதமாக செயல்படுகிறதோ அதே போன்று தன் நாட்டு குடிமக்களுக்கு அந்நியநாட்டினரால் துன்பம் இழைக்கப்படும் போதும் அக்கறையுடனும் உணர்வுடனும் செயல்பட வேண்டும் …
104 செயற்கைகோள்களை விண்ணில் ஒரேநேரத்தில் ஏவும் வல்லமை கொண்ட நாட்டில் இன்னும் மீனவர்கள் கடல் எல்லையை தாண்டுவதை கண்காணித்து தடுக்க முடியாதா என்ன ?
இரண்டு நாட்டு பிரச்சனைகளை பேசி தீர்ப்பதே சிறந்தது ..அதனை உடனடியாக இந்திய அரசாங்கம் செய்திடல் வேண்டும் …இந்திய மீனவர்களை காத்திட வேண்டும் ..
பாமரன் கருத்து